திருவனந்தபுரம் :வேலைக்கு போகக் கூடாது எனக் கூறி, மனைவியை கடுமையாக தாக்கி, அதை ‘வீடியோ’ எடுத்து வெளியிட்டவரை, கேரள போலீசார் கைது செய்தனர்.
கேரளாவின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர்திலீப், 27. இவர், தன் இளம் மனைவியை முகத்தில் ரத்தம் வடியும் வகையில் கடுமையாக தாக்கி, அதை வீடியோ எடுத்து, தன் நண்பர்களுக்கு பகிர்ந்தார்.
அந்த வீடியோவில் திலீப் கூறியிருந்ததாவது:
என் மனைவியின் முகத்தில் ரத்தம் வடிவதற்கு காரணம் நான் தான். வேலைக்கு செல்ல வேண்டாம் என பலமுறை கூறியும், அதை அவள் கேட்கவில்லை. இதனால் ஏற்பட்ட கோபத்தில்குடித்து விட்டு வந்து, என் மனைவியை சரமாரியாக அடித்து உதைத்தேன்.
இவ்வாறு அவர் அதில் கூறியிருந்தார்.
வீடியோவில், அந்த பெண் முகம் எங்கும் காயங்கள் இருப்பதும், வாயில் ரத்தம் வடிவதும் நன்றாக பதிவாகியிருந்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களிலும் வெளியானது. இதையடுத்து, கொலை முயற்சி உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ், திலீப் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர்.
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், ‘திலீப் ஏராளமாக கடன் வாங்கியுள்ளார். அவர், வேலைக்கு போகாமல் ஊர் சுற்றுவதால், அந்த கடனை திருப்பிச் செலுத்த முடியவில்லை. இதற்காக தான், நான் வேலைக்கு போவதாக கூறினேன்’ என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement