பிரித்தானியாவின் ராணியாக மகுடம் சூடவுள்ள மன்னரின் மனைவி கமீலா தனிப்பட்ட பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார்.
கடந்த வியாழன்று வருகை தந்த கமீலா, சுமார் 10 நாட்கள் இந்தியாவின் பெங்களூருவில் சிகிச்சை பெறவுள்ளதாக கூறப்படுகிறது.
பிரித்தானியாவின் ராணியாக கமீலா முடிசூடவுள்ளதால், ஸ்காட்லாந்து அரச குடும்பத்திற்கான பாதுகாப்பு படையினரும் வருகை தந்துள்ளனர்.
ஆயுர்வேதம் மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சைக்காக கமீலா வந்துள்ளார், தனிப்பட்ட பயணம் என்பதால் பொதுமைப்படுத்த வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக 8 முறை இங்கு வந்து சிகிச்சை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Getty Images