கோவை வெடிவிபத்து : தற்கொலை படையா… பயங்கரவாதிகளின் எதிர்கால திட்டமா? – சைலேந்திபாபு விளக்கம்

கோவை உக்கடம் ஈஸ்வரன் கோவில் வீதியில், சென்றுகொண்டிருந்த கார், வெடித்து இன்று காலை விபத்தானது. காரை ஓட்டிச் சென்ற நபர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, அந்த காரில் வெடிகுண்டு தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் பொருள்கள் இருப்பதாக தகவல் வெளியானது. 

விபத்து தொடர்ந்து கோவை உக்கடம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டார். பின்னர், அவர் செய்தியாளர்கள சந்தித்தார். அப்போது பேசிய அவர்,”வெடிவிபத்தில் உயிரிழந்தவர் 25 வயதான ஜமேசா முபின் என தெரியவந்துள்ளது. அவர் வந்த காரில் ஆணிகள், கோலிகுண்டு போன்றவை இருந்தது, தடயறிவியல் துறை ஆய்வில் தெரியவந்துள்ளது. 

ஜமேசா முபின் வீட்டை சோதனையிட்டதில் பொட்டாசியம் நைட்ரேட், அலுமினியம், சல்பர் போன்ற நாட்டு வெடி தயாரிக்க தேவையான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இறந்தவர் மீது வேறு வழக்குகள் எதுவும் இல்லை. இறந்தவருடன் தொடர்பில் இருந்த நபர்களை விசாரித்து வருகின்றோம். 12 மணி நேரத்திலேயே குற்றவாளி யார் என்பதை தனிப்படை கண்டறிந்துள்ளனர். 

இந்த கார் 9 பேரிடம் கைமாறியுள்ளது. தொடர்ந்து இதுகுறித்து வேகமாக விசாரணை நடத்தி கார் யார் வாங்கினார் என்பது குறித்தும், சிலிண்டர் எங்கிருந்து வந்தது என்பது குறித்தும் கண்டறிந்துள்ளோம். கோவை மாநகர காவல் துறை சிறப்பாக இந்த வழக்கை கையாண்டனர். அவர்களுக்கு வாழ்த்துகள். 

மேற்கு மண்டலத்தில் இருந்து 6 தனிப்படையினர் இந்த வழக்கை விசாரித்து உதவியுள்ளனர். ஜமோசா முபினிடம் NIA ஏற்கனவே விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால் அவர் மீது வேறு வழக்குகள் எதுவும் கிடையாது. போலீஸ் செக்போஸ்ட் அங்கு இருந்த்தால் அவர் இறங்கி ஓடி இருக்கலாம். இன்னும் புலன் விசாரணை நடைபெறுகின்றது.

காரில் எங்கேயா இந்த பொருட்களை கொண்டு சென்று இருக்கின்றனர். வருங்காலத்தில் ஏதாவது திட்டமிட்டு இருக்கலாம். வீட்டில் கைபற்றபட்ட வெடி மருத்துகளை பார்க்கும் போது எதிர்காலத்திற்கான திட்டங்களாக இருக்கலாம். தற்கொலை படையாக இருக்க வாய்ப்பில்லை. ஆணி, கோலி குண்டு போன்ற பொருட்கள் வண்டியில் இருந்த போது சிலிண்டர் வெடித்துள்ளது. 

வெடிமருந்துகள் வீட்டில்தான் இருந்தது. இறந்தவர் இஞ்சினியரிங் படித்துள்ளார். வருங்கால திட்டம் என்பது குறித்து தெரியவில்லை. சில ஆண்டுகளாக அவருடன் மொபைல் போனில் தொடர்பில் இருந்தவர்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்படும். 

ஓவ்வொரு தனிப்படையும் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர். 12 மணி நேரத்தில் குறிப்பிட்ட நபரை கண்டறித்துள்ளோம். எந்த அமைப்பிலும் உறுப்பினராக இருந்தாக தெரியவில்லை. விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. வழக்குகள் இருக்கும் நபர்களோடு தொடர்பில் இருந்துள்ளார். அந்த நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. 

இந்த வழக்கில் நல்ல முன்னேற்றம் நடைபெற்று வருகின்றது. தமிழகம் முழுவதும் 1.10 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர். கோவையிலும் போலீசார் பாதுகாப்பை அதிகரித்துள்ளோம்
செக்போஸ்ட் இருந்ததால் அதை தாண்டி ஓடியிருக்கின்றார், அப்போது சிலிண்டர் வெடித்து இருக்கின்றது.

சந்தேக மரணம், வெடிமருத்து சட்டம் ஆகிய இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது” என்றார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.