இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்ட அன்னபூரணி ஃபர்ஸ்ட் லுக்

கோமலா ஹரி பிக்சர்ஸ் மற்றும் ஒன் ட்ராப் ஓசன் பிக்சர்ஸ் நிறுவனங்களின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் லயோனல் ஜோஸ்வா இயக்கத்தில், லிஜோமோல் ஜோஸ், லாஸ்லியா, மெட்ராஸ் ஹரிகிருஷ்ணன் நடிப்பில் திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “அன்ன பூரணி”. இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை பிரபல இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் முன்னணி நடிகர் ஜெயம் ரவி ஆகியோர் தங்களது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டனர்.  

கதாப்பாத்திரங்களின் இயல்பையும், மாறுபட்ட கதைக்களத்தையும் வெளிப்படுத்தும்படியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான வேகத்தில்,  ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. குடும்ப அமைப்பிற்குள் வாழும் ‘பூரணி’ மற்றும் குடும்ப அமைப்பிற்கு வெளியே வாழும் ‘அனா’ஆகிய இருவரின் பயணமே இந்தப்படம். பெண்கள் குடும்ப அமைப்பிற்குள் அனுபவிக்கும் சிரமங்களை, கருத்து சொல்லும்படியாக இல்லாமல் ரசிகர்களுக்கு பிடிக்கும் வண்ணம், ஒரு மாறுபட்ட திரில்லர் டிரமாவாக சொல்லியுள்ளது இப்படம். 

பாடலாசிரியர் யுகபாரதி இப்படத்தின் பாடல்களை எழுதியதுடன் படத்திற்கான வசனங்களையும் எழுதியுள்ளார். மராத்தி ஒளிப்பதிவாளர் ஹெக்டர் ஒளிப்பதிவு செய்ய, 96 புகழ் கோவிந்த் வஸந்தா இசையமைத்துள்ளார். கலை இயக்கத்தினை அமரன் செய்துள்ளார். 

லாஸ்லியா, லிஜோமோல் ஜோஸ் முதன்மை பாத்திரங்களில் நடிக்க, மெட்ராஸ் ஹரிகிருஷ்ணன், ராஜீவ் காந்தி முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகள்  தீவிரமாக நடந்து வருகிறது. இப்படத்தின் இசை உரிமையினை TIPS MUSIC பெற்றுள்ளது. படத்தின் ட்ரெய்லர், இசை மற்றும் பட ரிலீஸ் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.