ஹார்ட்லேண்ட் : அமெரிக்காவில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்தில் உயிரிழந்ததாக கருத்தப்பட்ட தம்பதி மற்றும் நான்கு குழந்தைகள் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில், ஹார்ட்லேண்ட் என்ற இடத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு அக்., 21ம் தேதி அதிகாலையில் தீப்பற்றி எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்து உள்ளே சென்ற போது, ஒரு வீட்டில் தம்பதி மற்றும் நான்கு குழந்தைகள் என ஆறு பேர் உடல்கள் கிடந்தன. அவற்றை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.
இதுகுறித்து, ஹார்ட்லேண்ட் போலீஸ் அதிகாரி டோரின் மிஸ்கோ கூறியதாவது:
தீப்பற்றி எரிந்த வீட்டில் இருந்து மீட்ட ஆறு உடல்களிலுமே துப்பாக்கிக் குண்டு பாய்ந்துள்ளது உடற்கூறு ஆய்வில் தெரிய வந்துள்ளது. தன் மனைவி மற்றும் நான்கு குழந்தைகளை சுட்டுக் கொலை செய்த அந்தக் குடும்பத்தின் தலைவர், தன் நெற்றியில் சுட்டு தற்கொலை செய்துள்ளார். அங்கிருந்து சில துப்பாக்கிகள் கண்டெடுத்துள்ளோம். மேலும், குடியிருப்புக்கு தீ வைக்கப் பயன்படுத்திய சில பொருட்களும் கிடைத்துள்ளன. குடும்ப உறுப்பினர்களை கொன்ற பின் வீட்டுக்கு தீ வைத்து விட்டு அவர் தற்கொலை செய்திருக்கலாம். விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement