சேலம் மாவட்டம் கிச்சிப்பாளையத்தை அடுத்த எருமபாளையம் கனரா வங்கியில் நேற்று இரவு கனரா வங்கியை கொள்ளையடிக்கும் முயற்சி நடைபெற்று உள்ளது. தீபாவளியை முன்னிட்டு வங்கிக்கு மூன்று நாள் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இன்று காலை வழக்கம் போல் ஊழியர்கள் வங்கியில் வேலை செய்து வந்துள்ளனர்.
வங்கிக்கு அருகே அமைந்துள்ள தனியார் பேருந்துகள் பட்டறையில் பணியாற்றி வரும் நபர் வங்கி மேலாளர் இடம் வங்கியின் சுவற்றில் துளையிட்டுள்ளதாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து வங்கி மேலாளர் காவல்துறையினருக்கு தகவல் அளித்ததும் கிச்சிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதனை அடுத்து போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் ஆய்வு செய்துள்ளனர்.
காவல்துறையினரின் மோப்ப நாய்கள் வரவழைத்து தீவிர சோதனை மேற்கொண்டனர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் கிச்சிபாளையம் பகுதியில் பெரும்ப பரபரப்பை உண்டாக்கியுள்ளது.