திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தவிளாம்பட்டி கிராமத்தில் வசித்து வரும் 38 வயது பெண் கடந்த ஐந்தாம் தேதி மதுரை மாடக்குளம் பகுதியில் இருக்கும் கிறிஸ்தவ தேவாலயத்திற்கு செல்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார்.
அப்பொழுது ஒரு மர்ம நபர் அந்த பெண்ணிடம் வந்து உன்னுடைய அண்ணனை எனக்கு தெரியும். மதுரைக்கு செல்லும் வழியில் இறக்கி விடுகிறேன் என்று கூறி அவரை நம்ப வைத்து காரில் அழைத்துச் சென்றுள்ளார்.

தான் இறங்க வேண்டிய பேருந்து நிறுத்தம் வந்தபோது அந்த பெண் காரை நிறுத்த சொல்லி கூறியுள்ளார். ஆனால், அவர் நிறுத்தாமல் கடத்திச் சென்று மதுரை கடவூர் அரண்மனையான் காட்டுப்பகுதியில் அந்த பெண்ணை பாலியல் பண்புணர்வு செய்து அவரிடம் இருந்த இரண்டு பவுன் தங்கச் சங்கிலி திருடி சென்றார்.
இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, பாதிக்கப்பட்ட பெண் ஒரு வழக்கறிஞருடன் தென் மண்டல ஐஜி அலுவலகத்திலும், மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் புகார் கொடுத்துள்ளார்.