தடுப்பூசி போட்டாலும் கொரோனா தொற்று ஏற்படும்! இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்கா?

கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகம் முழுவதிலும் கொரோனாவின் கோரத்தாண்டவம் கடுமையாக இருந்தது. இதனால் அனைத்து நிறுவனங்களும், வழித்தடங்களும் இதர செயல்களும் ஸ்தம்பித்தது.  இந்த கொடிய கொரோனா தொற்று பல உயிர்களை அதன் வேட்டைக்கு இரையாக்கிக்கொண்டது, அனைவரது வாழ்க்கையிலும் கொரோனா மறக்கமுடியாத ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி சென்றுவிட்டது.  தற்போது கொரோனாவிற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு உலக மக்களுக்கு செலுத்தப்பட்டு வந்தது, இப்போது மக்கள் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிலிட்டனர்.  இந்நிலையில் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது, அதாவது கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்படும். அதனால் தடுப்பூசி போட்டவர்களும், ஏற்கனவே கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று இங்கிலாந்தின் ZOE கூறியுள்ளது.  கீழே கொடுக்கப்பட்டுள்ள சில அறிகுறிகள் உங்களுக்கும் உள்ளதா என்பதை கவனித்து உடனே மருத்துவரை அணுகி பரிசோதித்து கொள்வது நல்லது.

1) தொடர் இருமல் இருப்பது கொரோனாவிற்கான முக்கிய அறிகுறி, நீண்ட நாட்களாக தொடர் இருமல் இருக்கும், இதனால் நீங்கள் விரைவில் சோர்வடைந்து விடுவீர்கள்.  உங்களால மற்ற வேலைகளை செய்ய முடியாது, இருமல் ஆரம்பிக்கும்போதே ஏதேனும் மூலிகை மருந்துகள் சாப்பிடுவது, இஞ்சி டீ குடிப்பது போன்றவற்றை செய்யுங்கள்.

2) கொரோனா நோயின் பொதுவான அறிகுறியாக மூக்கு ஒழுகுதல் இருக்கிறது, முன்னர் கொரோனா பாதித்தவர்களில் இந்த அறிகுறி பொதுவாக அனைவரிடத்திலும் காணப்பட்டது.  இந்த வைரஸ் தொற்றானது மூக்கின் வழியாக நீரை வெளியேற்றுகிறது, இது நீண்ட நாட்களுக்கு நீடிக்கலாம் மற்றும் தடுப்பூசி போட்டவர்களிடமும் இந்த அறிகுறி காணப்படுகிறது.

3) மூக்கடைப்பு ஏற்பட்டு, இதனால் சுவாசம் தடைபட்டு சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுகிறது.  நாம் சாதாரணமாக இருக்கும்போதும் ஆக்சிஜனை உள்ளிழுக்கும் செயல்முறை நடந்துகொண்டே தான் இருக்கின்றது, மூக்கடைப்பு ஏற்படும்போது அந்த செயல்முறையில் பாதிப்பு ஏற்படுகிறது.  உங்கள் நாசியில் தொற்றுக்கள் எதுவும் ஏற்படாமலிருக்க ஸ்ப்ரே பயன்படுத்துவதை விட நீராவி பிடிப்பது நல்ல பலனை தரும்.

4) தொண்டை புண், இருமல் மற்றும் மூக்கு அடைப்பு ஆகியவற்றுடன் தலைவலியும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. தலைவலியால் சுவாசித்தலில் பாதிப்பு ஏற்படுகிறது, மேலும் இது உங்கள் தலையில் பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்திவிடும்.

5) தொண்டை வலி கொரோனா தொற்றின் பொதுவான அறிகுறிகளில் ஒன்று, ஒமிக்ரான் அலையின்போது இந்த அறிகுறி காணப்பட்டது.  தொண்டையில் தொடர்ந்து எரியும் உணர்வு, விழுங்குவதில் சிரமம் மற்றும் பேசுவதில் சிரமம் ஆகியவை ஏற்படும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.