பொன்னியின் செல்வன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி!

மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், அஷ்வின், ரஹ்மான் ஆகிய பல நட்சத்திர பட்டாளங்களின் நடிப்பில் கடந்த செப்டம்பர்-30ம் தேதியன்று பிரம்மாண்டமாக வெளியான பொன்னியின் செல்வன்-1 படம் உலகெங்கிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.  மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் நல்ல வரவேற்பையும், வசூலையும் வாரி குவித்து வருகிறது.  பிரபல எழுத்தாளர் கல்கி கிரிஷ்ணமூர்த்தி கைவண்ணத்தில் 1955ம் ஆண்டு எழுதப்பட்ட பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டது, 947-1014ம் ஆண்டு வரை சோழ தேசத்தை ஆண்ட சோழ பேரரசரின் பெருமையை கூறும் வகையில் புனையப்பட்டு எழுதப்பட்ட நாவல் தான் இது.  சோழ பேரரசரின் வெற்றிகள், திறமைகள், அரியணை ஏறுவதற்கு முன் அவர் சந்தித்த சிக்கல்கள் என நாவலில் உள்ளதை கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.

இப்படத்தின் இரண்டாம் பாகம் 2023ம் ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது, இப்படம் வெளியாகி இன்றுவரை ரூ.470 கோடிக்கும் மேல் வசூல் செய்திருக்கிறது.  திரையில் இப்படத்தை கண்டு ரசித்த பலரும் படத்தின் ஓடிடி வெளியீட்டிற்காக காத்துக்கொண்டிருந்த நிலையில் தற்போது இப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.  நவம்பர் மாதம் முதல் வாரத்தில் அமேசான் ப்ரைம் வீடியோ ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகவுள்ளது.  இந்தப்படம் ஓடிடியில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் விரைவில் பொன்னியின் செல்வன்-1 படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.  திரையரங்கில் கண்டு ரசித்த ரசிகர்கள் இனிமேல் எப்பொழுது வேண்டுமானாலும் ஓடிடியிலும் கண்டு ரசிக்கலாம்.  அதிக வசூல் செய்த நான்காவது தமிழ் படமாகவும், அத்தியாகி வசூல் செய்த 16-வது இந்திய படமாகவும் இப்படம் கொண்டாடப்படுகிறது.  ரசிகர்கள் பலரும் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்திற்காக காத்துகொண்டு இருக்கின்றனர், இரண்டாம் பாகமும் நல்ல வெற்றி பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.