ராணிப்பேட்டை: குவிண்டால் ரூ.7,755 … 140 மெட்ரிக் டன் பச்சைப்பயறு கொள்முதல் செய்ய இலக்கு!

விவசாயிகளின் விளைப்பொருள்களுக்கு உரிய விலை கிடைத்திடவும் அவர்களின் வருவாயை பெருக்கிடவும் தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறது. அந்த வகையில், மத்திய அரசின் நாஃபெட் நிறுவனத்தின் மூலம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 140 மெட்ரிக் டன் பச்சைப்பயறு கொள்முதல் செய்யவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக வேலூர் விற்பனைக் குழுவின்கீழ் செயல்பட்டுவரும் காவேரிப்பாக்கம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடமும், முதன்மைக் கொள்முதல் முகமையாக மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது.

மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன்

இந்த மையத்தில், கொள்முதல் செய்யப்படும் பச்சைப்பயிறு ஒரு குவிண்டாலுக்கு 7,755 ரூபாய் தரப்படும். டிசம்பர் 29-ம் தேதி வரை கொள்முதல் செய்யப்படுவதால், ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் பயன்பெறலாம் எனவும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. கொள்முதல் செய்யப்படும் பச்சைப் பயறுக்கான கிரையத் தொகை விவசாயிகளின் வங்கி கணக்கிற்கே நேரடியாக வரவு வைக்கப்படும்.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் நிலச்சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை மற்றும் வங்கிக் கணக்கு ஆகிய விவரங்களுடன் காவேரிப்பாக்கம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் முன்பதிவு செய்துக் கொள்ளலாம். இது தொடர்பான சந்தேகங்களுக்கு 9047256236 என்ற எண்ணில், விற்பனைக்கூட கண்காணிப்பாளரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

பச்சைப்பயறு

எனவே, பச்சைப்பயறு சாகுபடி செய்துள்ள ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் இந்த நல்வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு தங்களது விளைப் பொருளுக்கு அதிக விலைப் பெற்று பயன்பெறுமாறும், மேலும் விவரங்களுக்கு விற்பனைக்குழுவின் செயலாளரை அணுகுமாறும் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் தெரிவித்திருக்கிறார்.

அறிவிப்பு:

அக்டோபர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்வுக் கூட்டம், 28-ம் தேதியான வெள்ளிக்கிழமை காலை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் பிரச்னைகளையும், கோரிக்கைகளையும் முறையிடலாம் என மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.