இந்திய கிரிக்கெட் வாரியம் அதிரடி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு அளிக்கப்படும் ஊதியத்திற்கு சமமாக வீராங்கனைகளுக்கும் அளிக்கப்படும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இந்திய ஆடவர் அணிக்கு நிகராக மகளிர் அணிக்கும் சமமான ஊதியம் வழங்கப்படும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. பாலின சமத்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் வீரர்களுக்கு போட்டி கட்டணம் ஒரே மாதிரியாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

latest tamil news

இது தொடர்பாக பிசிசிஐ செயலர் ஜெய் ஷா கூறுகையில், ‛இந்திய மகளிர் அணிக்கு ஆண்கள் அணிக்கு நிகராக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு ரூ.15 லட்சமும், ஒருநாள் போட்டி ஊதியமாக ரூ.6 லட்சமும், டுவென்டி-20 போட்டிக்கு ரூ.3 லட்சமும் வழங்கப்படும். பாலின பாகுபாட்டை களையும் முதல் நடவடிக்கையாக ஒரே மாதிரியான ஊதியம் வழங்கப்படும்’ என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.