இந்திய பொருளாதாரத்தை பாதிக்கும் ஆன்லைன் கேமிங் செயலிகள் – எப்படி?

உலகம் முழுவதும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் களைகட்டியுள்ளது. ஐபிஎல் மற்றும் ஆசிய கோப்பைகளுக்கு பிறகு நடக்கும் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழா என்பதால், உலகம் முழுவதும் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் இப்போட்டிகளை ஆவலுடன் பார்த்து வருகின்றனர். இந்த நேரத்தை சரியாக பெருநிறுவனங்கள் பயன்படுத்திக் கொண்டு கவர்ச்சியான விளம்பரங்களை ஒளிபரப்பி வருகின்றனர். தொலைக்காட்சி, செயலிகளில் மட்டுமல்லாது பல்வேறு இணையதளங்களிலும் கிரிக்கெட் தொடர்பான விளம்பரங்கள் இணையத்தில் இடம்பெறுகின்றன. 

இவற்றில் பெரும்பாலானவை இந்தியாவுக்கு சொந்தமில்லாத வெளிநாடுகளில் இருந்து இயங்கும் ஆப்ஷோர் ஆன்லைன் கேமிங் செயலிகளாக இருக்கின்றன. இவற்றால் இந்திய அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. ஆன்லைனை பயன்படுத்தி தடை செய்யப்பட்ட பெட்டிங் நிறுவனங்கள் வரி ஏய்பில் ஈடுபடுவதை கருத்தில் கொண்டிருக்கும் மத்திய அரசின் வருவாய்த்துறை, MeITY உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.   

அவற்றில், Parimatch, DafaBet, Betway, 22 Bet மற்றும் 1xBet உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட ஆன்லைன் செயலிகளின் பட்டியலையும் வருவாய்த்துறை பகிர்ந்திருகிறது. இந்த நிறுவனங்களின் செயல்பாடுகளை உன்னிப்பாகவும் கவனித்து வரும் வருமானவரித்துறை, ஜிஎஸ்டி இயக்குநரகம், அந்த செயலிகளால் ஏற்படும் வரி இழப்பையும் கணக்கீடு செய்து வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை சூதாட்டங்கள் தடை செய்யப்பட்டவை. அந்த தளங்களில் ஒளிபரப்பாகும் விளம்பரங்கள் உள்ளிட்டவைகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும், வரியும் இருக்கின்றன. 

இந்திய மார்க்கெட்டை பொறுத்தவரை ஆன்லைன் கேமிங் துறையின் சந்தை மதிப்பு 2 பில்லியன் அமெரிக்க டாலர். இதனை குறிவைத்தது தான் இந்தியாவில் இல்லாமல், வெளிநாடுகளை மையமாக கொண்டு இயங்கும் ஆன்லைன் ஆப்ஷோர் கேமிங் செயலிகள் விளம்பரங்களை ஒளிபரப்பி வருகின்றன. Dafabet, Betway, Bet365, Parimatch, Fairplay மற்றும் 1xbet போன்ற  சூதாட்ட தளங்கள் இந்திய ஆன்லைன் கேமிங் துறையில் குறைந்தபட்சம் 25-30 பில்லியன்கள் வரை வரி ஏய்ப்பு செய்யலாம் என யூகிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஏற்கனவே சூதாட்ட விளம்பரங்களுக்கு தடை செய்திருந்தாலும், இணையத்தில் இயங்கும்ம் இத்தகைய நிறுவனங்கள் 5 ஆயிரம் கோடிக்கும் மேல் சம்பாதிப்பதாக பல்வேறு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இவை நேரடியாக அல்லாமல் குறுக்கு வழியில் நியூஸ் உள்ளிட்ட இணையதளங்களில் தங்களின் விளம்பரங்களை ஸ்பான்சர்களாக இடம்பெறச் செய்கின்றன. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.