இன்றுடன் நிறைவடைகிறது மருத்துவ கவுன்சிலிங்

சென்னை:
மருத்துவ படிப்புகளுக்கான முதற்கட்ட ஆன்லைன் கவுன்சிலிங் இன்று நிறைவு பெறுகிறது.

அரசு மற்றும் சுயநிதி கல்லுாரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டுக்கான மருத்துவ படிப்புகளுக்கான இடங்களுக்கான ஆன்லைன் கவுன்சிலிங், இம்மாதம் 19ம் தேதி துவங்கியது.

பொதுப்பிரிவினருக்கான கவுன்சிலிங், இம்மாதம் 19ம் தேதி துவங்கி, 25ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. தீபாவளி தொடர் விடுமுறையால், கவுன்சிலிங் தேதி 27ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

தீபாவளி பண்டிகை காரணமாக மாணவர்கள் கட்டணம் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மாணவர்கள், அவர்களின் பெற்றோர் கோரிக்கைக்கு ஏற்ப, இடங்களை தேர்வு செய்து, கட்டணம் செலுத்துவதற்கான அவகாசம், இன்று மாலை வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

நாளை மறுதினம் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட பட்டியல், https://www.tnhealth.tn.gov.in, https://tnmedicalselection.net என்ற இணையதளங்களில் வெளியிடப்படும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.