எப்போதும் தங்களை வெளிச்சத்திலேயே வைத்துக்கொள்ள வேண்டும் என பிரபலங்கள் விரும்புவது இயல்புாதான். அந்த வகையில், பாலிவுட் இயக்குநர் கரன் ஜோஹர் தொகுத்து வழங்கிய, இந்தி பிக்பாஸ் ஓடிடி மூலம் புகழ்பெற்ற சீரியல் நடிகை உர்ஃபி ஜாவேத்தும் எப்போதும் வித்தியாசமான தனது உடைகள் மூலம் பலரின் கவனத்தையும் ஈர்த்து வந்தார்.
வயர்களால் செய்யப்பட்ட ஆடையில் இருந்து பஞ்சு மிட்டாய் ஆடை வரை இணையத்தில் இளசுகளின் இதயத்துடிப்பை அதிகரிப்பதில், உர்ஃபி ஜாவேத் வல்லவர் என்றே கூறலாம். ஆனால், தற்போது, அவரின் சமீபத்திய பாடல் வீடியோ ஒன்று சட்ட சிக்கலில் சிக்கியுள்ளது தெரியவந்தது.
‘Haye Haye Yeh Majboori’ என்ற பெயரில் அவர் சமீபத்தில் வெளியிட்ட வீடியோதான் சிக்கலில் மாட்டியுள்ளது. அந்த வீடியோ குறித்து அடையாளம் தெரியாத ஒருவர் டெல்லியில் புகார் அளித்துள்ளார். இணையத்தில் வெளிப்படையான பாலியல் செயல்களை மின்னணு வடிவத்தில் வெளியிடுதல் என்ற முறையில் இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, இன்ஸ்டாகிராமில் உறுதிப்படுத்தப்படாத கணக்கு ஒன்று, இதுகுறித்து பதிவிட்டுள்ளது. இருப்பினும் இந்த புகார் குறித்து நடிகை உர்ஃபி ஜாவேத் பதில் ஏதும் அளிக்கவில்லை. நடிகை உர்ஃபி ஜாவேத் பல இந்தி சீரியல்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.