கொரோனா தடுப்பூசி இந்தியாவுக்கு பாராட்டு| Dinamalar

வாஷிங்டன்,:’தன் நாட்டுக்காக மட்டுமல்லாமல், உலக நாடுகளுக்கும் வழங்கும் வகையில், கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை இந்தியா உற்பத்தி செய்து வருகிறது’ என, வெள்ளை மாளிகை அதிகாரி தெரிவித்தார்.

அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில், கொரோனா தடுப்பு நடவடிக்கை குழுவின் ஒருங்கிணைப்பாளரான டாக்டர் ஆஷிஷ் ஜா கூறியுள்ளதாவது:

கொரோனா வைரஸ் போன்ற பெருந்தொற்றில் இருந்து, நம் நாட்டு மக்களை மட்டும் காப்பாற்றினால் போதாது; அனைத்து நாடுகளில் உள்ள மக்களையும் கவனிக்க வேண்டும்.

அமெரிக்காவில் இதுவரை உருவான அனைத்து உருமாறிய கொரோனா வைரஸ்களும், வெளிநாடுகளில் இருந்தே பரவிஉள்ளன. இதனால், அனைத்து நாடுகளுக்கும் கொரோனா தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

‘கோவாக்ஸ்’ என்ற அமைப்பின் வாயிலாக, 100க்கும் மேற்பட்ட ஏழை, நடுத்தர வருவாய் நாடுகளுக்கு தடுப்பூசி வழங்கப்படுகிறது.இந்த வகையில், தன் நாட்டுக்காக மட்டுமல்லாமல், உலக நாடுகளின் தேவைக்கும் ஏற்ப இந்தியா தடுப்பூசிகளை உற்பத்தி செய்து வருவது பாராட்டுக்கு உரியது.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.