ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள எல்லைக்கட்டுப்பாடு கோடு பகுதியில் பாதுகாப்பு படையினர் நேற்று வழக்கம் போல் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சுத்போராவில் உள்ள கர்னா செக்டாரில் மர்மநபர் ஊடுருவ முயன்றார். இதனை பார்த்த பாதுகாப்பு படையினர் அவரை எச்சரித்தனர். ஆனால் அந்த நபர் தொடர்ந்து முன்னேறி வந்ததால் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். பதிலுக்கு அந்த நபரும் துப்பாக்கி சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், பாதுகாப்பு படை வீரர்கள் அந்த நபரை சுட்டுக்கொன்றனர். கொல்லப்பட்டவர் வெளிநாட்டு தீவிரவாதி என சந்தேகிக்கப்படுகிறது.