நாகை: நாகை மாவட்டம் திருக்குவளை அருகே கோயிலில் மூன்று பழங்கால சிலைகள் மீட்கப்பட்டது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் நடவடிக்கை எடுத்தனர். கோயிலில் பராமரிக்கப்படும் எந்த பதிவேட்டிலும் சிலை குறித்த விவரங்கள் இல்லாத நிலையில் மீட்கப்பட்டுள்ளது. பன்னகா பரமேசுவர சுவாமி கோயில் வளாக அலமாரியில் மறைத்து வைக்கப்பட்ட சிலைகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.