மாணவி சத்யா கொலை வழக்கு: கைதான சதீஷ் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

சென்னை:
மாணவி சத்யா கொலை வழக்கு: கைதான சதீஷ் இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில், கல்லூரி மாணவி சத்யாவை அவரது நண்பரான, சதீஷ் என்பவரால் ரயில் முன் தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்டார். பின் தப்பியோடிய கொலையாளி கைது செய்யப்பட்டார். மகள் இறந்த துக்கத்தில் இருந்த சத்யாவின் தந்தை மாணிக்கமும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரத்தில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளது.

முதலில் ஒருதலைக்காதல் என கூறப்பட்டது. பின்னர், இருவரும் அருகே வீடுகளில் வசித்து வருவதாகவும், பல ஆண்டுகளாக காதலித்ததாகவும் தகவல்கள் பரவின. இதற்கிடையில், 32வயதான சதீஷ் 22 வயதான சத்யாவை காதலிக்கவும், திருமணம் செய்துகொள்ள வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக காவல்துறையில் இருமுறை புகார் கொடுக்கப்பட்டதாகவும், ஆனால் காவல்துறையினர் சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்காமல், இரு தரப்பினரையும் அழைத்து பேசி கட்டப்பஞ்சாயத்து செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுகிறது. கடந்த 4 மாதத்திற்கு முன் ஏற்பட்ட பிரச்சனையில் சதீஷ் சத்தியாவை கன்னத்தில் அறைந்ததால் அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்து பின் சதீஷை எச்சரித்து எழுதி வாங்கிக்கொண்டு வெளியே விட்டதும் விசாரணையில் தெரியவந்தது.

இந்த நிலையில்தான் சத்யாவிற்கு மாப்பிள்ளை பார்த்த பெற்றோர், வேறொரு நபருடன் திருமணம் பேசி முடித்துள்ளனர். இதனால் கோப மடைந்த சதீஷ், சத்தியா கல்லூரி செல்லும் வழியில், பரங்கிமலை ரயில் நிலையத்தில் வைத்துஅவருடன் தகராறு செய்ததுடன், அவரை ரயில்முன் தள்ளி கொலை செய்துவிட்டு தப்பி ஒடியதும் தெரிய வந்தது. பின்னர் கைது செய்யப்பட்ட சதீஷை போலீசார் சைதாப்பேட்டை 9வது குற்றவியல் நீதிமன்ற நடுவர் மோகனாம்பாள் முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய நிலையில், சதீஷுக்கு வரும் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி நடுவர் மோகனாம்பாள் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து சதீஷை போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், இன்று காலை பதினொரு மணிக்கு கைதான சதீசை ஆஜர்படுத்த சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சதீசை கானொளியில் ஆஜர்படுத்த அனுமதி கோரி சிபிசிஐடி தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.