#BREAKING : எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 7 பேர் கைது.!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் அவ்வப்போது தமிழக மீனவர்களை கைது செய்து வருவது தொடர்கதையாகி வருகிறது. 

இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்தாலும் அவர்கள் அத்துமீறி கைது செய்து வருவதாக தமிழக மீனவர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த பிரச்சனை காலம் காலமாக தொடர்ந்தாலும் கூட இன்னும் முழுமையாக தீர்வு காணப்படவில்லை.

இந்த நிலையில் நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 7 தமிழக மீனவர்களை கைது செய்துள்ளது. 

மேலும், விசாரணைக்காக காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படை கைது செய்யப்பட்ட மீனவர்கள் ராமேஸ்வரத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.