கிராமசபை போல் நகர, மாநகர சபை கூட்டம்… தமிழ்நாடு அரசு முடிவு

தமிழ்நாட்டில் கிராமசபை கூட்டமானது குடியரசு தினமாகன் ஜனவரி 26, உழைப்பாளர் தினமான மே 1, சுதந்திர தினமான ஆகஸ்ட் 15, உலக நீர் தினமான மார்ச் 22, உள்ளாட்சி தினமான நவம்பர் 1 ஆகிய நாள்களில் நடக்கும். அந்தவகையில் தற்போது, நவம்பர் 1 உள்ளாட்சி தினத்தை கொண்டாடும் வகையில்  தமிழகத்தில் உள்ள 12,525 ஊராட்சிகளிலும் பொது மக்கள் பங்கேற்கும் கிராம சபை கூட்டம் நடத்தப்படவுள்ளது. 

இந்தச் சூழலில் கிராம சபை கூட்டங்களைபோல, தமிழ்நாட்டில் முதல்முறையாக நகர சபை, மாநகர சபை கூட்டம் நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி சென்னை பல்லாவரம் அருகே பம்மல் 6ஆவது வார்டில் நவம்பர் 1ஆம் தேதி மாநகர சபை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மக்களின் குறைகளை கேட்கிறார்.

அதேபோல ஒவ்வொரு வார்டுக்கும் 9 உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு வார்டு கவுன்சிலர் தலைவராக இருந்து வருகிறார். அதன் அடிப்படையில் ஒவ்வொரு வார்டிலும் குறைகேட்பு கூட்டத்தில் குறை கேட்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. திறந்தவெளி மைதானத்தில் நடைபெறும் மாநகரசபை கூட்டத்தில் அமர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று வார்டு குறை நிறைகளை கேட்டு அறியவுள்ளார் நென கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.