
அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசியின் கணவர் பால் பெலோசியை மர்ம நபர் சுத்தியலில் தாக்கியதால், அவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சான்பிரான்சிஸ்கோ வீட்டில் அத்துமீறிப் புகுந்து தாக்கிய நபர் நான்சி எங்கே என்று கேட்டதாகவும் கூறப்படுகிறது. அந்த நேரத்தில் நான்சி வாஷிங்டனில் இருந்ததால் தப்பினார்.
இதனிடையே போலீசார் இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஒருவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.