வங்கியில் 1500 கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்த வழக்கில் பஞ்சாப் மாநிலம் லுாதியானா நகரை சேர்ந்த நிறுவன இயக்குனரை சி.பி.ஐ., கைது செய்தது.
இதுகுறித்து சி.பி.ஐ., எனப்படும் மத்திய புலனாய்வு இயக்குனரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பஞ்சாப் மாநிலம் லுாதியானா நகரில் உள்ள எஸ்.இ.எல்., டெக்ஸ்டைல்ஸ் என்ற நிறுவனம் துணி வகைகள் தயாரித்து விற்பனை செய்கிறது. இதற்கு பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் ஹரியானாவில் தொழிற்சாலைகள் உள்ளன. இந்த நிறுவனம் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில், 1,530 கோடி ரூபாய் கடன் வாங்கி அதை திருப்பிச் செலுத்தவில்லை.
இதையடுத்து, 2020ம் ஆண்டு ஆக.,6ல் வங்கி சார்பில் சி.பி.ஐ.,யில் புகார் செய்யப்பட்டது. இதுகுறித்து, சி,பி.ஐ., விசாரித்து வந்த நிலையில், அந்நிறுவன இயக்குனர் நீரஜ் சலுாஜா நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement