குஜராத் மாநிலம், மோர்ஹி பகுதியில் மச்சு என்ற பெயரிலான ஆறு ஓடிக் கொண்டிக்கிறது. இந்த ஆற்றை கடக்க அப்பகுதியில் பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஆற்றை கடந்து சென்றுக் கொண்டிருந்தனர்.
வழக்கம்போல் இன்று மாலையும் நூற்றுக்கணக்கானோர் பாலத்தில் நடந்து சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக பாலம் இடிந்து விழுந்தது.
இந்த விபத்தால் பாலத்தில் இருந்து ஆற்றில் விழுந்த பலரின் நிலை குறித்த அச்சம் எழுந்துள்ளது. அத்துடன் அவர்கள் மீது பாலத்தின் இடிபாடுகளும் விழுந்துள்ளதால் பலர் படுகாயம் அடைந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு படையினர் விபத்தில் சிக்கி ஆற்றில் தத்தளித்து கொண்டிருந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அதிர்ச்சிகரமான இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.