கடலூர் மாவட்டத்தில் இருக்கின்ற பண்ருட்டி பகுதிக்கு அருகில் வனத்துறை கட்டுப்பாட்டில் இருக்கின்ற நிலபரப்பில் பயிரிடப்பட்டு இருந்த மிளகாய் செடிகளை வனத்துறையினர் நாசம் செய்து விட்டதாக ஒரு பெண் கதறி அழுகின்றார்.
இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பண்ருட்டி அருகில் இருக்கின்ற ஒறையூர் பகுதியில் கங்காதேவி என்ற பெண் வசித்து வருகின்றார்.
இவர் அப்பகுதியில் இருக்கின்ற வனத்துறைக்கு சொந்தமான இடத்தை சுத்தப்படுத்தி சீராக்கி விவசாயம் செய்து வந்திருக்கின்றார். இந்த சூழலில் வனத்துறையினர் அந்த நிலத்தில் பயிரிட்டு இருந்த மிளகாய்ச் செடிகளை இரவு நேரத்தில் பிடிங்கி எறிந்துள்ளனர்.
இதனால், கங்காதேவி அந்த விவசாய நிலத்திலேயே அழுத நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.