நியூஸிலாந்து அணிக்கு எதிரான டி-20 மற்றும் ஒருநாள் போட்டி தொடரில் விளையாடும் இந்திய வீரர்கள் விவரம்

ஆஸ்திரேலியா-வில் நடைபெற்று வரும் டி20 உலககோப்பை தொடர் முடிந்த உடன், இந்திய அணி வரும் நவம்பர் 18 ஆம் தேதி முதல் நியூசிலாந்து சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறது.

அங்கு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இதற்காக இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, கேப்டன் ரோகித் சர்மா, கேஎல் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

காயம் காரணமாக ஜடேஜா, பும்ரா ஆகியோர் களமிறங்கவில்லை. இதே போன்று ருத்துராஜ் கெய்க்வாட்க்கும் இந்த தொடரில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

டி-20 அணி வீரர்கள் விவரம் :

ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ரிஷப் பண்ட் (துணை கேப்டன்), சுப்மான் கில், இஷான் கிஷன், தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், வாசிங்டன் சுந்தர், சாஹல், குல்தீப் யாதவ், ஆர்ஸ்தீப் சிங், ஹர்சல் பட்டேல்,முகமது சிராஜ், புவனேஸ்வர் குமார், உம்ரான் மாலிக்

இதே போன்று வரும் 25ஆம் தேதி தொடங்க உள்ள நியூசிலாந்துக்கு எதிரான 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக ரிஷப் பண்ட் அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஒருநாள் போட்டி தொடரில் இடம்பெற்றுள்ள வீரர்கள் :

ஷிகர் தவான் (கேப்டன்), ரிஷப் பண்ட் (துணை கேப்டன்), சுப்மான் கில், தீபக் ஹூடா, சூர்யகுமார், ஸ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், வாசிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், ஷபாஸ் அகமது, சாஹல், குல்தீப் யாதவ், ஆர்ஸ்தீப், தீபக் சாஹர், குல்தீப் சென், உம்ரான் மாலிக்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.