சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த கூலி தொழிலாளி… போக்சோவில் கைது.!

திருப்பூர் மாவட்டத்தில் சிறுமையை கடத்தி பாலியல் தொந்தரவு கொடுத்த கூலி தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி குணால் (22). இவர் 17 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி கடத்திச் சென்றுள்ளார். இதையடுத்து அந்த சிறுமிக்கு குணால் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து குணாலிடம் விசாரணை மேற்கொண்டதில், சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டுள்ளார்.

இதையடுத்து சிறுமியை கடத்திச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்த குணாலை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். பின்பு குணாலை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.