துர்க்:சத்தீஸ்கரில், பள்ளி சிறுமியர் இருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்த முதியவரை, போலீசார் நேற்று ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
சத்தீஸ்கரின், துர்க் மாவட்டத்தில் உள்ள ஆசாராம் பாபு நகரில், ஐந்து மற்றும் ஆறாம் வகுப்பு பயிலும் சிறுமியர் இருவர், ஆசிரியர் வீட்டுக்குச் சென்று டியூஷன் படித்து வந்துள்ளனர்.
அங்கு, ௬௦ வயதாகும் ஆசிரியரின் தந்தை, இந்த சிறுமியரை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார்.
இது குறித்த புகாரின்படி, போலீசார் முதியவர் மீது போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement