கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் மணிரத்னம் இயக்கத்தில் படமாகி சமீபத்தில் வெளியானது. கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் நடித்திருந்த பொன்னியின் செல்வன் பாகம் 1 உலகளவில் பெரும் வெற்றியை பெற்றிருக்கிறது. மேலும் படமானது 450 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. படத்தில் முக்கிய கதாபாத்திரமான குந்தவை கதாபாத்திரத்தில் த்ரிஷா நடித்திருந்தார்.
கல்கி படைத்த குந்தவைக்குரிய ராஜ தந்திரத்தையும், கம்பீரத்தையும் அப்படியே த்ரிஷா திரையில் பிரதிபலித்ததாக ரசிகர்கள் கூறினர். அவர் மட்டுமின்றி படத்தில் நடித்த அனைவருமே தங்களது கதாபாத்திரத்தை உணர்ந்து திரையில் பிரதபலித்தனர் என பெரும்பாலானவர்கள் கூறினர். இப்படி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பொன்னியின் செல்வன் பெரும் வெற்றி பெற்றிருக்கிறது. இதன் அடுத்த பாகம் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் வெளியாகுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தச் சூழலில் பொன்னியின் செல்வன் படத்தின் சக்சஸ் மீட் நேற்று சென்னையில் நடந்தது. இதில் விக்ரம், கார்த்தி, மணிரத்னம், லைகா சுபாஸ்கரன், ஜெயம் ரவி, பார்த்திபன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஆனால் த்ரிஷா மட்டும் மிஸ்ஸிங்.
சக்சஸ் மீட்டில் த்ரிஷா எதற்காக கலந்துகொள்ளவில்லை. ஒருவேளை படக்குழுவுடன் ஏதேனும் மனஸ்தாபம் ஏற்பட்டுவிட்டதோ என ரசிகர்கள் குழம்பினர். இப்படிப்பட்ட சூழலில் வெளிநாட்டு டூரின்போது த்ரிஷா எதிர்பாராதவிதமாக கீழே விழுந்ததில் அவருடைய காலில் அடிப்பட்டிருக்கிறது. அந்தப் புகைப்படத்தையும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார்.
இதனைப் பார்த்த ரசிகர்கள் இந்த விபத்தால்தான் த்ரிஷாவால் பொன்னியின் செல்வன் சக்சஸ் மீட்டில் கலந்துகொள்ள முடியவில்லை என்று புரிந்துகொண்டனர். மேலும், அவருக்கு ஏற்பட்ட காயத்திலிருந்து விரைவில் அவர் வெளியில் வரவேண்டுமென்றும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். அதுமட்டுமின்றி த்ரிஷாவுக்கும் பொன்னியின் செல்வன் படக்குழுவுக்கும் மனஸ்தாபம் என்ற சர்ச்சைக்கும் இதன் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.