இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்கல் கலந்துகொள்ள வாய்ப்பில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது
1988ஆம் ஆண்டு முதல் அரச குடும்பத்தின் கொண்டாட இடமாக Sandringham இருந்து வந்தது
இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்கல் இருவரும் அரச குடும்பத்தின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள மாட்டார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
ராணியின் மறைவுக்கு பின்னர் இந்த ஆண்டு அரச குடும்பத்தின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நார்ஃபோக்கில் உள்ள தோட்டத்தில் நடைபெற உள்ளது.
முதல் முறையாக மன்னர் சார்லஸ் வருடாந்திர குடும்பம் கூடும் நிகழ்வு மற்றும் கிறிஸ்துமஸ் விடுமுறை கொண்டாட்டத்தை இங்கு நடத்த உள்ளார்.
அன்மார் ஹாலுக்கு அருகில் உள்ள வீட்டில் வேல்ஸ் இளவரசரும், இளவரசியும் தங்குவார்கள் என்று கூறப்படுகிறது.
இதர குடும்ப உறுப்பினர்கள் கிறிஸ்துமஸ் காலை அன்று மன்னருடன் தேவாலயத்திற்கு செல்லும் நடைப்பயணத்தில் இணைந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
JOE GIDDENS – PA IMAGES//GETTY IMAGES
இந்த நிலையில் கொண்டாட்டத்தில் இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்கல் தம்பதி இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள மாட்டார்கள் என்று மன்னருக்கு நெருக்கமான ஒருவர் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராணி இல்லாமல் நடக்கும் முதல் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில், ஹரி – மேகன் தம்பதி கலந்துகொள்ள வாய்ப்பில்லை என தெரிகிறது.
1988ஆம் ஆண்டு முதல் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக்கான தளமாக Sandringham-ஐ அரச குடும்பத்தினர் மாற்றியுள்ளனர்.
Chris Jackson—Getty Images
ஆனால், கொரோனா பரவல் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக குடும்ப பாரம்பரிய இடம் கொண்டாட்டத்திற்காக மாற்றப்பட்டு இருந்தது.
எனினும், ராணி மறைவுக்கு பின் Sandringham-யில் இம்முறை அரச குடும்பத்தின் கொண்டாட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.