இந்தியாவில் முதன்முறையாக தமிழகத்தில் மெய்நிகர் நூலகங்கள் தொடக்கம்!

மாணவ, மாணவிகளுக்கு புத்தகங்களில் சொல்லப்பட்டுள்ள விஷயங்களை வாசிப்பதை காட்டிலும், 360 டிகிரி கோணத்தில் மெய் நிகர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எளிதாக கற்றுக் கொள்ளும் வகையில், இந்தியாவில் முதன்முறையாக தமிழகத்தில் 76 நூலகங்களில் மெய்நிகர் நூலக (Virtual Reality) பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
‘நூலக நண்பர்கள் திட்டம்’
தமிழகத்தில் மாநில நூலகம் மற்றும் 30-க்கும் அதிகமான மாவட்ட மைய நூலகங்கள், முழுநேர கிளை நூலகங்கள், கிளை நூலகங்கள், ஊர்ப்புற நூலகங்கள், பகுதி நேர நூலகங்கள் என 4,000-க்கும் அதிகமான நூலகங்கள் உள்ளன.
இந்த நிலையில்,
* நூலகத்திற்கு வருவோரின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையிலும், நூலகங்களுக்கு வர முடியாத மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் உள்ளிடோர், வீடுகளில் இருந்தே நூல்களை வாசிக்க உதவும் வகையில் ‘நூலக நண்பர்கள் திட்டம்’ கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
* இந்த திட்டத்தைச் செயல்படுத்தும் பணிகளை தமிழ்நாடு பொது நூலக இயக்குனரகம் தொடங்கி உள்ளது.
* இந்தத் திட்டத்தின்படி, தமிழகம் முழுவதும் முதல் கட்டமாக 60 சதவீத நூலகங்களில் தலா 5 தன்னார்வலர்களை நியமித்து, அவர்கள்வீடு, வீடாகச் சென்று நூல்களை வழங்கும் பணியில் ஈடுபடுவார்கள்.
* வீடுகளுக்குச் செல்லும்போது நூலக உறுப்பினர்களாக இல்லாதவர்களை, உறுப்பினர்களாகச் சேர்க்கும் பணியையும் இவர்கள் மேற்கொள்வர்.
* நூலகத்தில் இருந்து நூல்களைப் பெற்று சென்று நூல்களை விநியோகிப்பது, விநியோகித்த நூல்களைத் திரும்பப் பெற்று வந்து நூலகத்தில் ஒப்படைப்பது ஆகிய பணிகளை இவர்கள் மேற்கொள்வர்.

மெய்நிகர் நூலக (Virtual Reality) பிரிவு தொடக்கம்
* இதனிடையே, இந்தியாவில் முதன்முறையாக தமிழகத்தில் உள்ள நூலகங்களில் முதல்கட்டமாக 76 நூலகங்களில் மெய்நிகர் நூலக பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
* இதற்காக ரூ. 65.54 லட்சம் மதிப்பில் 152 மெய்நிகர் நூலக கருவிகள் வாங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நூலகத்திற்கும் தலா இரண்டு மெய்நிகர் நூலக கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.
* 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இந்த கருவிகளைப் பயன்படுத்துவதில் முன்னுரிமை அளிக்கப்படும்.
இதில் குறிப்பிட்ட புத்தகத்தை வாசிப்பதை காட்டிலும், 360 டிகிரி கோணத்தில் மெய் நிகர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எளிதாக கற்றுக் கொள்ள முடியும். இந்த தொழில்நுட்பமும் ஒரு ஆசிரியர் போன்றுதான்.
* இந்த கருவியில் மாணவ, மாணவிகள் பார்க்கும்போது அவர்களுக்கு நாடுகள், கோள்கள், ஆழ்கடல், மலை காடுகள், சிகரம், பணிப்பாறைகள், விண்வெளி கண்டங்கள், இயக்கம், சூரிய குடும்பம், வானில் நடக்கும் அற்புதங்கள், ஜூராசிக் வேர்ல்டு போன்றவைகளை நேரில் காண்பது போல் இருக்கும் என்பதால் மாணவ, மாணவிகளுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.
மெய்நிகர் நூலக கருவிகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து 155 நூலகர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும், சென்னையில் ஆழ்வார்பேட்டை வட்ட நூலகத்திலும், அசோக் நகர் நூலகத்திலும் இந்த வசதி உள்ளதாகவும், இதன் மூலம் மாணவர்கள் தாங்கள் படித்ததை புத்தகங்களில் அனுபவித்து உணர முடியும் என்பதால், அதிகமான குழந்தைகள் நூலகங்களுக்கு வருவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் தமிழ்நாடு பொது நூலக இயக்குனரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே தற்போதைக்கு அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் மட்டும் 3,000க்கும் மேற்பட்ட புத்தகங்களுக்கு டிஜிட்டல் வசதி உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள 500 க்கும் அதிகமான நூலகங்கள் விரைவில் இணையதள வசதிகளுடன் டிஜிட்டல் மயமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, கேரளா ஆளுநர்கள் Vs முதல்வர்கள்… ஆளுநர் எதிர்ப்பில் தீவிரம் காட்டுவது யார்?!

பா.ஜ.க ஆளாத கேரளா, தமிழ்நாடு, தெலங்கானா மாநிலங்களில் முதல்வர்களுக்கும், ஆளுநர்களுக்கும் இடையிலான முட்டல் மோதல்கள் நாள் தோறும் அதிகரித்தவாறே இருக்கிறது. சமீபத்தில், கேரளா மற்றும் தமிழ்நாட்டில் கட்டுக்கடங்காத வகையில் இப்பிரச்னை வளர்ந்து நிற்கிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரைச் சட்டமன்றத்தில் இயற்றப்படும் தீர்மானங்களை ஆளுநர் நிகாரித்து திருப்பி அனுப்புவதும், கிடப்பில் போட்டு வைப்பது தொடர்கதையாகி வருகிறது.
மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க…
மிஸ்டர் கழுகு: ரத்தான டெண்டர் விவகாரம்… ராஜ் பவனுக்குப் போன புகார்!

மேற்கேயுள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் 72 கோடி ரூபாய் மதிப்பில் ஹாஸ்டல் கட்டுவதற்காக டெண்டர்விட முடிவுசெய்யப்பட்டிருந்தது. கடைசி நேரத்தில் அந்த டெண்டரை நிறுத்திவைத்து விட்டார்களாம்.
காரணம்…
மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க…
ராஜீவ் கொலை வழக்கில் விடுதலை: “திருச்சி சிறப்பு முகாமில் நால்வர் உண்ணாவிரதமா?”

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த நளினி, ரவிச்சந்திரன், சாந்தன், முருகன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய 6 பேரும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனர்.
இதில் வேலூர், சென்னை புழல் சிறையிலிருந்து விடுதலையான முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய நால்வரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடந்த 12-ம் தேதி இரவு திருச்சி மத்திய சிறை வளாகத்தில் இருக்கக்கூடிய சிறப்பு முகாமுக்கு கொண்டுவரப்பட்டனர். இவர்கள் மீது…
மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க…
லிவிங் டுகெதர்: கொல்லப்பட்ட இளம்பெண்; உடலை 35 துண்டுகளாக்கிக் காட்டுப்பகுதியில் வீசிய காதலன்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் வசிப்பவர் விகாஸ் பால்கர். இவருடைய மகள் ஷ்ரத்தா (Shraddha (26) ). இவர் மும்பையிலுள்ள பன்னாட்டு கால் சென்டரில் பணிபுரிந்துவந்திருக்கிறார். உடன் வேலைசெய்யும் அஃப்தாப் அமீன் பூனாவாலா (Aftab) என்பவருடன் ஷ்ரத்தாவுக்கு அறிமுகம் ஏற்பட்டிருக்கிறது.
அது நாளடைவில் இருவருக்கும் காதலாக மாறியிருக்கிறது. அதனால், இருவரும் அங்கிருந்து வேலையை டெல்லிக்கு மாற்றிக்கொண்டு, லிவிங் டுகெதர் முறையில் திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்துவந்திருக்கின்றனர்.
மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க…
உறவின்போது காண்டம் கிழிந்தால் உடனடியாகச் செய்ய வேண்டியது இதுதான்! | #VisualStory

தாம்பத்ய உறவு தொடர்பான பிரச்னைகளை வெளியே சொல்வதற்குப் பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் தயங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க…
“பல விபத்துகளைத் தாண்டிதான் சினிமாவுக்கே வந்தேன்!” – ‘புதிய பாதை’ பார்த்திபன் @ 1989′

ஒரு சினிமா நிஜமான கதை!
பொறந்ததுலேருந்து ஒரு குழந்தை படுத்து. புரண்டு, குப்புற விழுந்து நெத்தியில அடிபட்டு, சுவத்தைப் புடிச்சு எழுந்து, ரெண்டு கையையும் விட்டுட்டு, எந்தப் புடிப்புமே இல்லாம சுத்தியிருக்கறவங்களை மிரண்டு மிரண்டு பாக்குமே… அந்த மாதிரியான மனநிலையிலதான் இப்போ நான் இருக்கேன்.
இது ஒண்ணும் ஒரு பெரிய சாதனையாளனோட ஃபிளாஷ்பேக் இல்லை! ‘திரும்பிப் பார்க்கிறேன்’ – `பின்னோக்கிச் செல்கிறேன்’ – மாதிரியான பெரிய விஷயமும் இல்லை. ஆனாலும் இதை நான் சொல்ல ஆசைப் படறத்துக்கு ஒரு காரணம் இருக்கு.