
நயன்தாரா பிறந்தநாளில் கனெக்ட் படத்தின் டீசர் ரிலீஸ்
ஜவான், கனெக்ட், இறைவன், கோல்ட் போன்ற படங்களில் நடித்து வருகிறார் நயன்தாரா. இதில் அவர் கதையின் நாயகியாக நடித்துள்ள கனெக்ட் படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தை மாயா படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் இருக்கியுள்ளார்.நயன்தாராவுடன் இணைந்து அனுபம் கேர், சத்யராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள் .
கனெக்ட் படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் விக்னேஷ் சிவன். அதோடு இப்படத்தின் டீசர் நயன்தாராவின் பிறந்தநாளான நவம்பர் 18ம் தேதி வெளியாக இருப்பதாகவும் அவர் அறிவித்திருக்கிறார். விக்னேஷ் சிவன் நயன்தாரா தம்பதிக்கு வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தை பிறந்த பிறகு நயன்தாரா கொண்டாடும் முதல் பிறந்தநாள் இது என்பதால், அன்றைய தினம் தனது உறவினர்கள் மற்றும் திரையுலக நண்பர்கள் முன்னிலையில் கேக் வெட்டி பிறந்த நாளை விமர்சியாக கொண்டாடவும் திட்டமிட்டுள்ளார் நயன்தாரா.