மகாராஷ்டிர மாநில தலைமை செயலகத்தின் ஆறாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சித்த நபர், பாதுகாப்பிற்காக பொருத்தப்பட்ட வலையில் விழுந்து உயிர் தப்பினார்.
தெற்கு மும்பையில் உள்ள அம்மாநிலத்தின் தலைமைச்செயலகமான மந்த்ராலயாவில், பாபு மோகாஷி என்பவர், திடீரென ஆறாவது தளத்திலிருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சித்தார்.
ஆனால், முன்னெச்சரிக்கையாக அங்கு பொருத்தப்பட்டிருந்த பெரிய வலையில் அவர் விழுந்து உயிர் தப்பிய நிலையில், பாபுவை மீட்ட போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.