விக்ரம் எஸ் ராக்கெட்: ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் மூலம் தனியாரால் உருவாக்கப்பட்ட நாட்டின் முதல் ராக்கெட் ஆன விக்ரம் எஸ் ராக்கெட்டை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதால் இந்திய விண்வெளித் துறை இன்று மாபெரும் முன்னேற்றம் கண்டுள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, நாட்டின் தனியாரால் உருவாக்கப்பட்ட முதல் ராக்கெட் ஆன விக்ரம்-எஸ் ராக்கெட்டை இன்று, நவம்பர் 18, 2022 அன்று ஏவியது. இந்திய விண்வெளித் ஸ்டார்ட் அப் நிறுவனமான ஸ்கைரூட் தயாரித்த விக்ரம்-எஸ் ராக்கெட் இன்று காலை 11.30 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளித் தளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. இந்த ஏவுதலின் மூலம் இந்தியா தனியார் விண்வெளித் துறையில் மாபெரும் முன்னேற்றம் கண்டு வரலாறு படைத்துள்ளது.
Mission Prarambh is successfully accomplished.
Congratulations @SkyrootA
Congratulations India! @INSPACeIND pic.twitter.com/PhRF9n5Mh4— ISRO (@isro) November 18, 2022
இஸ்ரோவின் நிறுவனர் விக்ரம் சாராபாயின் பெயரிடப்பட்ட விக்ரம் எஸ் ராக்கெட், இந்தியாவின் வளர்ந்து வரும் தனியார் விண்வெளித் துறையுடன் இஸ்ரோவின் உறவின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் ‘பிராரம்ப்’ என்ற தலைப்பில் பெயரிடப்பட்ட மிஷனின் கீழ் விண்ணில் செலுத்தப்பட்டது.