உலகில் மிக நீண்ட பாதங்களை கொண்டவர் இவர் தான்! அமெரிக்க சாதனைப் பெண் கூறிய வார்த்தை


அமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணொருவர் நீண்ட பாதங்களைக் கொண்டவர் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளார்.

மிக நீண்ட பாதங்கள்

அமெரிக்காவின் ஹூஸ்டனைச் சேர்ந்தவர் தான்யா ஹெர்பர்ட்(39). சுமார் 6 அடி உயரம் கொண்ட இவரது வலது பாதம் 13.03 அங்குலம், இடது பாதம் 12.79 அங்குலம் ஆகும்.

இவர் தான் உலகின் மிகப்பெரிய பாதங்களைக் கொண்டவர் என தற்போது அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.

தான்யா கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.

Guinness World Records தனது ட்விட்டர் பக்கத்தில் தான்யா குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

தனது இரண்டு பாதங்களின் உயர வித்தியாசத்தினால் தான் படும் இன்னல்கள் குறித்து தான்யா கூறுகையில்,

‘ஒன்லைனில் நான் காணக்கூடிய மிகப்பெரிய காலணிகளை வாங்கி, அவற்றைக் கையாள்வதன் மூலம், அவற்றை கொஞ்சம் நீளமாக நீட்டி என் கால்களுக்கு பொருந்தும் வகையில், அவற்றை கொஞ்சம் அகலமாக்குவேன்’ என தெரிவித்துள்ளார்.

கால்களுக்கு மதிப்பு

மேலும், தான்யா தனது பாதங்கள் குறித்து கூறுகையில், ‘என்னைப் பின்தொடரும் ஆண்களில் 5 சதவீதம் பேர் எனது கால்களின் படங்களை விற்கலாமா என்று கேட்டு, சமூக வலைதளத்தில் விசித்திரமான மற்றும் சுவாரசியமான கருத்துக்களை அனுப்புகிறார்கள்’ என தெரிவித்துள்ளார்.

தான்யா ஹெர்பர்ட்/Tanya Herbert

இந்த ஆண்டின் தொடக்கத்தில் தனது பெரிய கால்களுக்காக தான்யா டிக்டாக்கில் வைரலானார் என்பது குறிப்பிடத்தக்கது.

காலணி உற்பத்தி தொழிலுக்கு ஒரு தீப்பொறியாக இருக்க விரும்புவதாக தான்யா கூறியுள்ளார்.  

தான்யா ஹெர்பர்ட்/Tanya Herbert



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.