என் உயிர், உலகம் எல்லாம் நீ தான்… லவ் யூ பொண்டாட்டி – நயன்தாராவிடம் உருகிய விக்னேஷ் சிவன்

தமிழ் சினிமா மட்டுமல்லாது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்பவர் நடிகை நயன்தாரா. தனது 38வது பிறந்தநாளை கொண்டாடும் அவருக்கு திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இயக்குனரும், நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் வெளியிட்ட வாழ்த்து பதிவு வைரலாகி வருகிறது. அதோடு அவர்கள் இருவரின் ரொமான்ட்டிக்கான படங்களையும் பதிவிட்டுள்ளார்.

அதில், ‛‛உன்னுடன் எனக்கு இது 9வது பிறந்நாள். ஒவ்வொரு பிறந்தாளுமே ஸ்பெஷலானது, மறக்க முடியாதது. இந்தாண்டு கணவன், மனைவியாக, அழகான இரண்டு குழந்தைகளுக்கு பெற்றோராக இன்னும் ஸ்பெஷல். நான் உன்னை எப்போது தைரியமான பெண்ணாக பார்க்கிறேன். நீ எதை செய்தாலும் அதை நம்பிக்கையுடன், அர்ப்பணிப்புடன் செய்வாய். உனது நேர்மையால் எப்போதும் ஈர்க்கப்பட்டுள்ளேன்.

ஆனால் இப்போது உன்னை குழந்கைளின் அம்மாவாக பார்க்கிறேன். நீ இப்போது தன்னிறைவு அடைந்ததாக உணர்கிறேன். இப்போது இன்னும் நீ அழகாய் இருக்கிறாய். குழந்தைகள் உன்னை முத்தமிடுவதால் நீ இப்போது மேக்கப் போடுவதில்லை. இப்போது உன் முகத்தில் உள்ள புன்னகையும், மகிழ்ச்சி எப்போதும் உன்னுடன் இருக்க வேண்டுகிறேன்.

என் உயிர், உலகம் எல்லாம் நீ தான். லவ் யூ பொண்டாட்டி. தங்கமே… பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் லேடி சூப்பர் ஸ்டார்.

இவ்வாறு விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.