கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் ஏடிஎமில் பணம் எடுக்க உதவுவது போல் பெண்ணை ஏமாற்றி 56 ஆயிரம் ரூபாயை மோசடி செய்த இளைஞரை சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் தேடி வருகின்றனர்.
செங்குறிச்சியை சேர்ந்த கலைச்செல்வி ஏடிஎமில் பணம் எடுப்பதற்காக அருகில் இருந்த நபரை உதவுமாறு அனுகியுள்ளார். இதை பயன்படுத்திக்கொண்ட அந்த இளைஞர், ஏடிஎம் பின் நம்பரை அறிந்துக்கொண்டு பணம் வரவில்லை என போலி கார்டை கொடுத்துவிட்டு பின் அந்த கார்டை பயன்படுத்தி 56 ஆயிரம் எடுத்துள்ளார். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார்.