செஸ் வரி மாற்றத்தினால் பாடசாலை உபகரணங்களின் விலை அதிகரிப்பு குறித்து கண்டறிவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய இன்று (18) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இறக்குமதி அல்லது தற்பொழுது உள்ள செஸ் வரி பாடசாலை மாணவர்களுக்கு அடிப்படையாக தேவைப்படும் உபகரணங்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்துமாயின் (18) அதனை மாற்றுவதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் கூறினார்.
வரவு செலவு திட்டத்தின் 2 ஆவது வாசிப்பு மீதான விவாதம் இன்றும் நடைபெற்றது. 4 ஆவது நாளாக நடைபெற்ற இந்த விவாதத்தின் போது இராஜாங்க அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.