நாமக்கல் மாவட்ட பகுதியில் வெற்றிவேல் தனது மகன் சக்திவேல் (27) என்பவருடன் வசித்து வருகிறார். மகன் சக்திவேல் எம்.பி.பி.எஸ் டாக்டர் பட்டம் பெற்றவர். சென்ற 11ஆம் தேதி நண்பர் வீட்டிற்கு செல்வதாக சொல்லி விட்டு வீட்டிலிருந்து புறப்பட்ட நிலையில், வீடு திரும்பவில்லை.
இதனை தொடர்ந்து சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் அவரை தேடினர். இந்த நிலையில், சென்ற இரண்டு நாட்களுக்கு முன்பாக கன்னியாகுமரி பகுதிக்கு வந்ததை தொடர்ந்து அங்கு தங்குவதற்காக ஒரு விடுதியில் அறை எடுத்துள்ளார்.
அவரின் மீது சந்தேகம் ஏற்பட்டவே விடுதி ஊழியர்கள் போலீசார்க்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை செய்ததில், ஒரு வருடமாக நோயால் பாதிக்கப்பட்டுள்ளதும், அதனால் சிகிச்சை பெற்று வந்ததும் தெரிய வந்துள்ளது.
இது பற்றி அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பின்பு, போலீசார் அவரை தந்தையுடன் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.