தப்பான நண்பர்களால் பாதிக்கப்பட்டேன்! மனம் திறந்த பிரபல தமிழ் நடிகர்


தப்பான சில நண்பர்களால் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்தித்ததாக நடிகர் ஷக்தி மனம் வருந்தியுள்ளார்.

நடிகர் ஷக்தி 

தமிழில் தொட்டால் பூ மலரும் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் ஷக்தி.

பிரபல இயக்குநர் பி.வாசுவின் மகனான இவர், சிறு வயதில் நடிகன், சின்னத்தம்பி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

பின்னர் கதாநாயகனாக மாறிய அவர், அடுத்தடுத்து நடித்த படங்கள் தோல்வியை சந்தித்தன.

2017ஆம் ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற ஷக்தி, பொதுவெளியில் விபத்தை ஏற்படுத்தி சர்ச்சையில் சிக்கினார்.

இந்த நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய அவர் தனது தோல்வி குறித்து மனம் திறந்தார்.

அவர் கூறுகையில், ‘என் வாழ்வின் இடையில் நிறைய தடைகளை சந்தித்தேன். அதனால் மன அழுத்தத்திற்கு தள்ளப்பட்டேன்.

என் வாழ்க்கை முறை வித்தியாசமாக இருந்தது.

ஷக்தி வாசுதேவன்/Shakthi Vasudevan

தப்பான சில நண்பர்கள் என் உடன் இருந்தனர்.

என்னை வழிநடத்த சரியான ஆள் அப்போது இல்லை. சொந்த வாழ்க்கையிலும் சில விடயங்கள் தவறாக போனது.

இது எல்லாம் சேர்த்து என்னால் திரையுலகில் கவனம் செலுத்த முடியாமல் போனது. மேலும் விருப்பம் இல்லாமல் தான் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டேன்’ என தெரிவித்துள்ளார்.         

ஷக்தி வாசுதேவன்/Shakthi Vasudevan



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.