தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் அரசு கஸ்தூர்பா கல்லூரி இயங்கிவருகிறது. இக்கல்லூரியில் உள்ள ஆய்வகத்தில் ரசாயன வாயு கசிவு ஏற்பட்டதால், சுமார் 25 மாணவர்கள் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து 25 மாணவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வாயு கசிவு ஏற்பட்டத்தை தொடர்ந்து, கல்லூரியில் இருந்த அனைத்து மாணவர்களும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து தடயவியல் நிபுணர்கள், அரசு கல்லூரிக்கு விரைந்துள்ளனர். சந்தேகத்திற்குரிய வகையில் திடிரென வாயு கசிவு ஏற்பட்டது குறித்து, தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.