நடுத்தர வயதான இலங்கை தமிழ் பெண் தூக்கிட்டு தற்கொலை! வெளிவரும் பின்னணி தகவல்கள்


தமிழகத்தில் இலங்கை தமிழ் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறை விசாரித்து வருகிறது.

இலங்கை தமிழர் முகாமில் வசித்து வந்த தம்பதி.

கரூர் தாந்தோன்றிமலை அருகே, இலங்கை தமிழர் முகாமை சேர்ந்தவர் தர்மராஜேஸ்வரன். இவரது மனைவி யோகலதா (36).

இந்நிலையில் தர்மராஜேஸ்வரன் அடிக்கடி மது அருந்திவிட்டு வந்ததால் கணவன், மனைவி இடையே குடும்பதகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்து காணப்பட்டார் யோகலதா.

நடுத்தர வயதான இலங்கை தமிழ் பெண் தூக்கிட்டு தற்கொலை! வெளிவரும் பின்னணி தகவல்கள் | Srilankan Tamil Women Died Investigation

பொலிசார் விசாரணை

இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் யோகலதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வந்த புகாரின் பேரில் தான்தோன்றிமலை பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணை முடிவில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.