நவீனமயமாகும் தீவிரவாதம்! பயங்கரவாதத்திற்கு நிதியுதவியை தடுக்க வேண்டும்: அமித்ஷா கவலை

நியூடெல்லி: தீவிரவாத அச்சுறுத்தலை மதம், தேசியம் அல்லது எந்தவொரு குழுவுடன் இணைக்கக்கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். அண்டைநாடுகளான பாகிஸ்தான் மற்றும் சீனா மிது அமித் ஷாவின் மறைமுக தாக்குதல் இது என்று பார்க்கப்படுகிறது. “பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான நமது கூட்டுத் தீர்மானத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்த அல்லது தடுக்கும் நாடுகளும் உள்ளன” என்ற அவரது வார்த்தை அதை நிரூபிக்கிறது. தீவிரவாதத்தை எந்த மதத்துடனும், தேசியத்துடனும், சமூகத்துடனும் தொடர்புபடுத்தக்கூடாது என்று கூறிய அமித் ஷா, தீவிரவாதத்தைவிட ஆபத்தானது அதற்கு நிதியுதவி செய்வதே  என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

தீவிரவாதத்தை எந்த மதத்துடனும், தேசியத்துடனும், சமூகத்துடனும் தொடர்புபடுத்தக்கூடாது. தீவிரவாதத்தைவிட ஆபத்தானது அதற்கு நிதியுதவி செய்வதுதான் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்

டெல்லியில் நடைபெற்று வரும், தீவிரவாதத்துக்கு நிதியுதவி கிடைப்பதைத் தடுப்பது தொடர்பான மாநாட்டை உள்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா,  வன்முறை சம்பவங்களை தொடர்ந்து நடத்துவதற்கும், இளைஞர்களை தீவிரவாதிகளாக மாற்றுவதற்கும், தீவிரவாதிகள் தொடர்ந்து முயன்று வருகின்றனர். அதற்கு அடிப்படையாக தேவைப்படும் பணத்தை திரட்டுவதற்காக, நிதி ஆதாரங்களை உருவாக்கும் புதிய வழிகளை அவர்கள் கண்டுபிடித்து வருகிறார்கள் என்று தெரிவித்தார். 

தீவிரவாதத்தைப் பரப்பவும், தங்கள் அடையாளங்களை மறைக்கவும் டார்க்நெட் போன்ற தொழில்நுட்பங்களை தீவிரவாதிகள் பயன்படுத்துகிறார்கள் என்று உள்துறை அமைச்சர் குறிப்பிட்டார். “கூடுதலாக, கிரிப்டோகரன்சி போன்ற மெய்நிகர் சொத்துக்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இந்த டார்க்நெட் செயல்பாடுகளின் வடிவங்களைப் புரிந்துகொண்டு அவற்றின் தீர்வுகளைக் கண்டறிய வேண்டும்” என்று உள்துறை அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

பயங்கரவாதத்தை ‘டைனமைட்’ மற்றும் ‘ஏகே-47′ இருந்து மெய்நிகர் சொத்துக்கள்’ என மாற்றுவது நாடுகளுக்கு கவலையளிக்கும் விஷயம் என்றும், அதற்கு எதிராக ஒரு பொதுவான மூலோபாயத்தை வகுக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் உள்துறை அமைச்சர் கூறினார்.

நவீன ஆயுதங்கள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் இணையம் மற்றும் நிதித்துறையின் இயக்கவியல் ஆகியவற்றின் நுணுக்கங்களை பயங்கரவாதிகளும் பயங்கரவாத குழுக்களும் இப்போது நன்கு புரிந்து கொண்டுள்ளனர், என்றார். ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைப் பற்றிக் குறிப்பிட்ட அமித் ஷா, ஆகஸ்ட் 2021க்குப் பிறகு, தெற்காசியப் பிராந்தியத்தில் நிலைமை மாறியுள்ளதாகவும், அல்-கொய்தா மற்றும் ஐஎஸ்ஐஎஸ் ஆகியவற்றின் வளர்ந்து வரும் செல்வாக்கு பிராந்திய பாதுகாப்பிற்கு குறிப்பிடத்தக்க சவாலாக உருவெடுத்துள்ளதாகவும் கூறினார்.

தீவிரவாதம் உருவாவதும், அது வளர்க்கப்படுவதும் பணத்தின் அடிப்படையி தான் என்று கூறிய அமித்ஷா, பணம் கொடுக்க ஆட்கள் இருப்பதால் தான் பயங்கரவாதம் தீவிரமாக வளர்ந்து வருகிறது என்று தெரிவித்தார். அதோடு பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளிப்பதன் மூலம் உலக நாடுகளின் பொருளாதாரம் பலவீனமாகிறது என்பதை உள்துறை அமைச்சர் சுட்டிக்காட்டினார். 

தீவிரவாதத்தை எதிர்கொள்ளவும், பாதுகாப்பு கட்டமைப்பிலும், நிதி மற்றும் சட்ட அம்சங்களிலும் இந்தியா முன்னேற்றமடைந்துள்ளது என்று கூறிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தை குறைத்து மதிப்பிடும் சில நாடுகள், என்று அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் சீனாவின் பெயரை குறிப்பிடாமல் அமித்ஷா பேசினார்.

தீவிரவாதிகளுக்கு புகலிடம் கொடுக்கும் சில நாடுகள். அவர்களை பாதுகாக்கின்றன என்று கூறிய அமித் ஷா, தீவிரவாதியை பாதுகாப்பது என்பது தீவிரவாதத்தை வளர்ப்பதற்கு இணையானது என்றும், அத்தகைய நபர்கள் ஒருபோதும் அவர்களின் நோக்கத்தில் வெல்லக்கூடாது என்பதை உணர்ந்து நாம் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார். 

“இந்தப் புதிய சமன்பாடுகள் பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதற்கான பிரச்சனையை மேலும் தீவிரமாக்கிவிட்டன. மூன்று தசாப்தங்களுக்கு முன்னர், முழு உலகமும் அத்தகைய ஒரு ஆட்சி மாற்றத்தின் கடுமையான விளைவுகளைச் சுமக்க வேண்டியிருந்தது, இதன் விளைவாக 9/11 இன் கொடூரமான தாக்குதலை உலகம் கண்டது” என்று அமித் ஷா தெரிவித்தார்.

இந்தப் பின்னணியில், தெற்காசியப் பிராந்தியத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட மாற்றங்கள் அனைவருக்கும் கவலை அளிக்கும் விஷயமாக உள்ளது என்று கூறிய அமித் ஷா. அல்-கொய்தாவுடன், தெற்காசியாவில் லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது போன்ற அமைப்புகளும் தொடர்ந்து பயங்கரவாதத்தை பரப்பி வருவது குறித்து கவலையை பதிவு செய்தார்..

பல தசாப்தங்களாக எல்லைக்கு அப்பால் இருந்து ஆதரவளிக்கப்படும் பயங்கரவாதத்திற்கு இந்தியா பலியாகியுள்ளது என்று தெரிவித்த உள்துறை அமைச்சர், “இந்திய பாதுகாப்புப் படைகளும் பொதுமக்களும் நீடித்த மற்றும் ஒருங்கிணைந்த முறையில் நிகழ்த்தப்பட்ட மிகக் கடுமையான பயங்கரவாத வன்முறை சம்பவங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது” என்று தெரிவித்தார்.

“பயங்கரவாதத்தையும் அதன் அனைத்து வடிவங்களையும் கண்டிக்க வேண்டும் என்ற கூட்டு அணுகுமுறையை சர்வதேச சமூகம் கொண்டுள்ளது. ஆனால், தொழில்நுட்ப புரட்சியின் காரணமாக பயங்கரவாதத்தின் வடிவங்களும் வெளிப்பாடுகளும் தொடர்ந்து மாறி வருகின்றன,” என்று அமித் ஷா தெரிவித்தார்  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.