'பயங்கரவாதத்தை எந்த மதத்துடனும் தொடர்பு படுத்தக்கூடாது!' – அமித் ஷா

“பயங்கரவாதத்தை எந்த மதத்துடனும் தொடர்பு படுத்தக்கூடாது,” என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்து உள்ளார்.

பயங்கரவாதிகளுக்கு நிதி கிடைப்பதை தடுப்பது தொடர்பாக, ‘நோ மணி ஃபார் டெரர்’ என்ற தலைப்பில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் நடக்கும் மாநாட்டில், பாஜக மூத்தத் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா பேசியதாவது:

சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு பயங்கரவாதம் மிகப்பெரிய அச்சுறுத்தல் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதே நேரத்தில் என்னை பொறுத்தவரை, இதனை விட மிகப்பெரிய அச்சுறுத்தலாக,

பயங்கரவாதத்திற்கு நிதி அளிப்பது செய்வது மாறி உள்ளது. இந்த நிதி மூலம் தான் பயங்கரவாத கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகள் வளர்கின்றன.

மேலும், பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிப்பதன் மூலம், உலக நாடுகளின் பொருளாதாரம் மிகப்பெரிய அளவு பாதிக்கப்படுகிறது. எந்த மதம், நாடு அல்லது குழுக்களுடன், பயங்கரவாதத்தை தொடர்புபடுத்துவதை நாம் அங்கீகரிக்கக் கூடாது.

பயங்கரவாதத்தை எதிர்கொள்ள, பாதுகாப்பு கட்டமைப்பு, சட்டம் மற்றும் நிதி அமைப்புகளை வலுப்படுத்துவதில், நாம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளோம். பயங்கரவாதத்தை எதிர்த்து போராடுவதற்கான நமது கூட்டு தீர்மானத்தை குறைத்து மதிப்பிடவும் அல்லது தடுக்கவும் சில நாடுகளும் உள்ளன. சில நாடுகள் பயங்கரவாதிகளை பாதுகாத்து, அடைக்கலம் கொடுப்பதை நாம் பார்க்கிறோம்.

அத்தகைய முயற்சி வெற்றி பெறுவதை தடுப்பது நமது கூட்டு முயற்சியில் தான் அமையும்.

இவ்வாறு அமித்ஷா பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.