கராச்சி, :பாகிஸ்தானில் சாலை ஓரம் வெட்டப்பட்ட பள்ளத்தில் வேன் கவிழ்ந்த விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ௧௨ குழந்தைகள் உட்பட ௨௦ பேர் பரிதாபமாக பலியாகினர்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானில், சிந்து மாகாணத்தில் உள்ள காயிர்பூரில் இருந்து, சேவானில் உள்ள மசூதிக்கு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, நெடுஞ்சாலை ஓரமாக வெட்டப்பட்டுஇருந்த பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்துக்குஉள்ளானது.
இந்தப் பள்ளத்தில் தண்ணீர் தேங்கியிருந்த நிலையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ௧௨ குழந்தைகள் உட்பட ௨௦ பேர், இதில் மூழ்கி பலியாகினர்; ஏராளமானோர் காயமடைந்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து, போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். கடந்த ஜூலையில், பாகிஸ்தானில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டது. இதில், ௧,௬௦௦ பேர் உயிரிழந்தனர்.
வெள்ளம் வேகமாக வழிந்தோடி இந்துஸ் நதியில் கலப்பதற்காக, நெடுஞ்சாலையில் ௩௦ அடி அகலத்துக்கு பள்ளம் தோண்டப்பட்டது.
இதை, வேன் டிரைவர் கவனிக்காததே விபத்துக்கு காரணம் என, போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement