பாஜகவை விமர்சிப்பதால் என்னுடன் நடிக்க அச்சப்படுகிறார்கள்; நடிகர் பிரகாஷ்ராஜ் பேட்டி.!

கர்நாடக பத்திரிகையாளரும், சமூக ஆர்வலருமான கவுரி லங்கேஷ், பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பை கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். இதையடுத்து கடந்த செப்டம்பர் 5, 2017 அன்று அவர் படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலையை விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு, தனது குற்றப்பத்திரிகையில் இந்துத்துவா ஆதரவுக் குழுவான சனாதன் சன்ஸ்தாவின் பெயரைப் பதிவு செய்துள்ளது.

இந்த படுகொலையை தொடர்ந்து கவுரி லங்கேஷின் நெருங்கிய நண்பரும், பிரபல திரைப்பட நடிகருமான பிரகாஷ்ராஜ், பாஜக அரசை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார். மேலும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக சுயேச்சையாக பிரகாஷ்ராஜ் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். இருப்பினும் பாஜக அரசை தொடர்ந்து விமர்சித்துப் பேசி வருகிறார்.

இந்நிலையில், பாஜக-வை எதிர்ப்பதால் தன்னுடன் சக நடிகர்கள் பேசுவதற்குப் பயப்படுகிறார்கள் என, நடிகர் பிரகாஷ் ராஜ் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இது குறித்துப் பிரகாஷ்ராஜ் கூறும்போது, ‘‘ஆளும் அரசையும், அதன் மக்கள் விரோத திட்டங்களுக்கு எதிராகவும் நான் நேரடியாக தொடர்ந்து பேசி வருவதால், பல நடிகர்கள் மற்றும் டெக்னீஷியன்கள் என்னுடன் பணியாற்ற விரும்பவில்லை.

எனது அரசியல் நடவடிக்கைகளால் எனது பணி பாதிக்கப்படுகிறது. அதற்காக அரசியலைத் தூக்கி வீசிவிட முடியாது. வேண்டுமென்றால் எனது பணியை விட்டு ஒதுங்கியிருக்கலாம். அந்த அளவுக்கு வசதியும் வலிமையும் எனக்கு இருக்கிறது. பல நடிகர்கள் முன்பு போல் என்னிடம் பேசுவதில்லை. அதற்காக நான் வருத்தப்படவில்லை.

காதலியை துண்டு துண்டாக வெட்டி கொலை; குற்றவாளிக்கு உண்மை கண்டறியும் சோதனை.!

ஒரு பிரச்சனைக்கு எதிராகப் பேசுவது அந்த கலைஞர்களைப் பாதிக்கும் என்பதால், அவர்களைக் குறை கூறவில்லை. இப்போது நான் இன்னும் சுதந்திரமாக உணர்கிறேன். ஏனென்றால் நான் என் குரலை உயர்த்தாமல் இருந்திருந்தால், என் படங்களின் காரணமாக நான் ஒரு நல்ல நடிகனாக மட்டுமே அறியப்பட்டிருப்பேன். ஆனால் நான் இல்லாமல் போகும்போது நல்ல மனிதனாகவும் பிரகாஷ் ராஜ் இருந்தான் என சொல்ல வேண்டும் என விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.