பாலா விரும்பி எடுத்துக் கொண்ட குரூப் போட்டோ

ஜீ5 ஓடிடி தளத்தில அடுத்து ஒளிபரப்பாகும் புதிய வெப் தொடர் “பைவ் சிக்ஸ் செவன் எய்ட்”. இயக்குநர் விஜய் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக பணியாற்றியுள்ள இத்தொடரை விஜய், பிரசன்னா, மிருதுளா ஸ்ரீதரன் இணைந்து இயக்கியுள்ளனர். முழுக்க நடனத்தைப் பின்னணி கதைக்களமாகக் கொண்டு இத்தொடர் உருவாகியுள்ளது.

இத்தொடரில் தித்யா சாகர் பாண்டே, சின்னி பிரகாஷ், விவேக் ஜோக்தாண்டே ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் நாகேந்திர பிரசாத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இன்று முதல் ஜீ5 தளத்தில் காணலாம். இந்த தொடரின் அறிமுக விழா நடந்தது. இதில் தொடர் குழுவினருடன் சிறப்பு அழைப்பாளர்களாக இயக்குனர் பாலா, நடிகர் ஜீவா, பாடலாசிரியர் மதன் கார்க்கி கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் பாடலாசிரியர் மதன் கார்க்கி பேசியதாவது: டான்ஸை வைத்து வெப் தொடர் உருவாக்குவது மிக கடினம் அதிலும் குழந்தைகளை வைத்து உருவாக்குவது அதை விடக் கடினம். ஆனால் விஜய் அதில் கைதேர்ந்தவராக இருக்கிறார். ஒரு பெண் குழந்தை தன்னுடைய உலகம் என்ன எனத் தேடி, வெளியே வந்து ஜெயிப்பதை பேசும், இந்த படைப்பு வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி. என்றார்.

நடிகர் ஜீவா பேசியதாவது: பைவ் சிக்ஸ் செவன் எய்ட் டான்ஸ் ஸ்டெப்பை குறிக்கும் சொல் இதைப் புரிந்து கொள்ளவே எனக்கு ரொம்ப காலம் ஆனது. இந்த தொடரில் நிறையப் புதுமுகங்களை அறிமுகப்படுத்தியுள்ளார்கள். பார்க்க மிகப் புதுமையாக இருக்கிறது. விஜய் மற்றும் குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள். இத்தொடர் பார்க்க நானும் ஆவலாக உள்ளேன் அனைவருக்கும் வாழ்த்துக்கள். என்றார்.

பின்னர் பேசவந்த இயக்குனர் பாலா குழுவினருக்கு ஒரு சில வார்த்தைகளில் வாழத்து சொல்லிவிட்டு இதுபோன்ற துடிப்பான இளைஞர்களுடன் ஒரு குரூப் போட்டோ எடுத்துக் கொள்ள விரும்புகிறேன் என்று சொல்லி குரூப் போட்டோ எடுத்துக் கொண்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.