மின்கம்பி விபத்து: மின்சார வாரியம்தான் பொறுப்பு… நீதிமன்றம் உத்தரவு!

மழைக்காலங்களில் பல இடங்களில் மின்கம்பிகள் அறுந்து விழுந்து பல உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. ஆனால், இவை அனைத்திற்கும் இயற்கையின் மீது பழியை போடுகிறோம். ஆனால், இயற்கை சீற்றத்தால் பாதிப்பு ஏற்பட்டாலும் அதை பாதுகாக்க, பராமரிக்க வேண்டிய மின்சார வாரியமே அதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை உயர் நீதிமன்றம்

மதுரையை சேர்ந்த சூரியகாந்தி என்பவரின் கணவர் 2013-ல் வீட்டிற்கு அருகில் உள்ள தென்னை மரம் மின்சாரக் கம்பி மீது விழுந்து அறுந்தது. அந்தக் கம்பி விழுந்ததன் பேரில் சூரியகாந்தியின் கணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் வாழ்வாதாரத்தை இழந்து தவித்த சூரியகாந்தி தன் நிலையை எடுத்து கூறி, தனக்கு உரிய இழப்பீடு கிடைக்க வேண்டும் என மதுரை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.விஜயகுமார், “இயற்கை சீற்றத்தால் தென்னை மரம் விழுந்ததற்கு மின்வாரியம் பொறுப்பேற்க முடியாது என்று கூறுவதை ஏற்க முடியாது. ஆனால், மழைக்காலங்களிலும், பருவநிலை மாற்றங்களிலும் மின்கம்பி போகும் பாதைகளை முறையாக பார்த்துக்கொள்ள வேண்டுமென்றும். மரக்கிளைகள் விழுந்து மின்கம்பிகள் அறுந்து விழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும், இவ்வாறு நடைபெறும் இறப்புக்களுக்கும், விபத்துக்களுக்கும் மின்சார வாரியம் தான் பொறுப்பேற்க வேண்டும்.

தமிழ்நாடு மின்சார வாரியம்

இத்தகைய சூழலில் இயற்கையின் மீது குற்றம் சாட்டி தப்பித்து கொள்ள முடியாது. எனவே, மின்சார வாரியம் மனுதாரருக்கு ரூ.10.85 லட்சத்தை வட்டியுடன் சேர்த்து இழப்பீட்டாக கொடுக்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளார்.

எனவே, மழைக்காலங்களில் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும், மின்சார வாரியத்தினர் அனைத்தையும் சரியாக கவனித்து இத்தகையை இழப்புக்களை தவிர்க்கவும், அப்படி நடந்தால் மின்சார வாரியமே பொறுப்பேற்க வேண்டும் என்றும் உயர்நிதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.