வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து… ஒரே குடும்பத்தை சேர்ந்த 20 பேர் பலி!

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் செஹ்வான் ஷெரீப் பகுதியில் புகழ்பெற்ற சூஃபி ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்துக்கு ஒரு வேனில் 25 க்கும் மேற்பட்டவர்கள் புனித பயணம் மேற்கொண்டிருந்தனர்.

வேன் கைர்பூர் அருகே சிந்து நெடுஞ்சாலையில் வேகமாக பயணித்துக் கொண்டிருந்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையை ஒட்டிய 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

அண்மையில் அங்கு ஏற்பட்ட வெள்ளத்தால் பள்ளம் முழுவதும் நீர் தேங்கியிருந்தால், அதில் மூழ்கி வேனில் பயணித்த 6 சிறுவர்கள், 8 பெண்கள் உள்பட மொத்தம் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ற அதிர்ச்சிகரமான தகவலும் வெளியாகி உள்ளது.

உலகின் 800 ஆவது கோடி அதிசய குழந்தை எங்கு பிறந்துள்ளது தெரியுமா?

சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை கவனிக்காமல் டிரைவர் வேனை ஓட்டியதே இந்த விபத்துக்கு காரணம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள இந்த விபத்து குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும், விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.