அண்ணாமலையை கடிந்துகொண்ட அமித் ஷா… பறிபோகும் தலைவர் பதவி?

தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தமிழகம் வந்த உள்துறை அமித் ஷா சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். முன்னதாக ஒரு மணி நேரம் திட்டமிட்டிருந்த ஆலோசனை மூன்று மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது என்று சொல்லப்படுகிறது. அப்போது, அமித் ஷா திமுக அரசின் நடவடிக்கைகளை உற்று கவனித்து ஒவ்வொரு நாளும் குறைகளை ஊடக வாயிலாக தெரியப்படுத்த வேண்டும் என்ற அசைன்மென்ட்டை கட்சி நிர்வாகிகளுக்கு கொடுத்துள்ளாராம்.

மேலும், அண்ணாமலையை அமித் ஷா கடிந்து கொண்டதாகவும் ஒரு தகவல் கசிந்துள்ளது. மாநில தலைவராக அண்ணாமலையில் செயல்களில் திருப்தி இல்லாததால், அண்ணாமலையை அமித் ஷா கடிந்துகொண்டதாவும், விரைவில் தமிழக பாஜக தலைவரை மாற்ற டெல்லி மேலிடம் திட்டமிட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.

இதுகுறித்து அரசியல் விமர்சகர் காந்தராஜ் தனியார் யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், எல்லா கட்சியிலும் அவ்வப்போது தலைவர்கள் மாற்றப்படுவது நல்லதுதான். அண்ணாமலை பொறுத்தவரை கட்சி தலைவராக அவரது பங்களிப்பு முடிந்து விட்டது. என்னன்ன உளற முடியுமோ அதையெல்லாம் அவர் உளறிவிட்டார். இனிமே உளற அவரிடம் விஷயம் இல்லை. அவருக்கு பிறகு வேறொரு நபரை தலைவராக்குவார்கள். அவரும் அண்ணாமலையை போல சில காலம் கொதிப்பார்” என்று அவர் கூறினார்.

மேலும், தமிழ்நாட்டு அரசியலில் வெற்றிடம் இருப்பதாகவும் அமித் ஷா கூறிவிட்டு சென்றதாகவும் தகவல் கசிந்தன. அடுத்து வரும் தேர்தல்களில் பாஜக – திமுக என்ற போட்டியே நிலவும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மட்டுமின்றி டெல்லி மேலிடமும் உறுதியாக இருக்கும் சூழலில் பாஜக தலைவர் அண்ணாமலையை அமித் ஷா கடிந்துகொண்டதாக கூறப்படும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.