புதுடில்லி: டில்லி ஆம்ஆத்மியின் அமைச்சருக்கு ஜெயிலில் மசாஜ் செய்யப்பட்ட வீடியோ சமூகவலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கெஜ்ரிவால் தலைமையிலான அமைச்சரவையில் சத்யேந்திரஜெயின் மீது சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பாக வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.. சுகேஷ் என்பவரிடம் 10 கோடி பெற்றதாகவும் புகார் உள்ளது. டில்லி அமைச்சரவையில் சிறைத்துறை அவருக்கு தான் ஒதுக்கப்பட்டுள்ளது. ஜாமின் கேட்டு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில் அவருக்கு ஜெயிலில் மசாஜ் செய்த வீடியோவை மத்திய அரசு வழக்கறிஞர் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளார். பல நேரங்களில் ஜெயின் மருத்துவமனையிலும், ஜெயிலில் சுகவாசியாக அனைத்து வசதிகளையும் பெற்று வருகிறார் என்றும் கூறியுள்ளார்.

இந்த வீடியோ பா.ஜ., தரப்பில் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் அவருக்கு நாற்காலியில் அமர வைத்து தலையில் மசாஜ் மற்றும் படுக்க வைத்த நிலையில் பாதங்களுக்கு மசாஜ் செய்து விடுகிறார். ஒருவர் அவர் சிறை ஊழியரா என்ற தகவல் இல்லை.
இது குறித்து ஆம்ஆத்மி தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில்; இது மசாஜ் அல்ல அவருக்கு அக்குப்பஞ்சர் சிகிச்சை அளிக்கப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement